இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஒப்பமிட்டு அனுப்பப்பட்ட கடிதம் மூலம் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் முல்லைமாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும் அரச அரசசார்பற்ற, நிறுவனங்களால் மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் வேலைத்திட்டங்களை ஒருங்கமைத்தலும் , தொடர் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் முக்கிய கடமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் றிசாட் பதியுதீன் (அமைச்சர்) அவர்களும் வடமாகாண முதலமைச்சர் க. வி.விக்னேஸ்வரனும் இணைத்தலைவர்களாக செயல்படுவர் என்றுள்ளது.
மேற்படி நியமனம் முல்லைமாவட்ட மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைக்க முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.