முளங்காவில்லில் பேரூந்து நிலையம் அமைக்கும் செயல்த்திட்டம் ஆரம்பம் – வடக்கு போக்குவரத்து அமைச்சர்…
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் ரூபா 3.5 மில்லியன் செலவில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் நிதி உதவியுடன் தனியார் மற்றும் அரச பேரூந்துகளுக்கான பேரூந்து நிலையம் அமைக்கும் திட்டம் அமுலாக்கும் நடவடிக்கையின்கீள் 19-05-2015 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும், அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள், பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் அடங்கலான குழுவினர் இடத்தை பார்வையிட்டனர், அத்தோடு திட்டத்தை விரைவு படுத்துமாறும், நீண்ட கால பாவனைக்கான திட்டமாக இருக்கும் வண்ணம் திட்டமிடிமாறும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து அங்குள்ள மக்களின் நிலை குறித்தும் அங்குள்ள கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்