
முளைகட்டிய தானிய சாலட்
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு – 50 கிராம்,
நிலக்கடலை – 25 கிராம்,
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எலுமிச்சை பழம் – பாதி
செய்முறை :
பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஊறவைத்து, ஒரு நாள் முழுவதும் முளைகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கலவையுடன் சேர்த்து வெங்காயம், தக்காளி, கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதன்மீது பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை தூவி குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பலாம்.
சத்தான முளைகட்டிய தானிய சாலட் ரெடி.