முளைக்கும் நிலையில் புதைக்கப்பட்ட 600 தமிழர்கள்…. தொிகிறதா….?

362

வரலாற்றில் இன்றைய நாள் – 1999 செப்டம்பர் 7 ஆம் நாள் – இலங்கை இராணுவத்தினரால் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் அம்பலமான நாள்.

புதைக்கப்பட்ட உண்மைகள் மீண்டும் எழுந்து நீதிக்காக போராடும் காலமிதில் தமிழினப் படுகொலைகளின் தொடர்ச்சிகளை உலகம் அறியச் செய்வோம்

விதைத்தவை முளைக்கும். புதைக்கப்பட்ட நீதி மீண்டு எழும் காலம் எழுகை கொண்ட இனமே விடுதலையை வென்றெடுக்கும்!

இன்றைய சமாதான தேவதை என அம்மணி என எம்மவர் கூறும் சந்திாிக்கா காலத்தில் நடந்தவை இவரும் சற்றும் சளைத்தவரல்ல மகிந்தவிற்கு காரணம் இன்று தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைத்திலுக்கும் அன்று அதாவது 2002 இல் ஏற்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரபை மற்றும் பொதுக்கட்டமைப்பு கைச்சாத்தாக தயாரான வேளை பாராளுமன்றத்தை கலைத்து ரணில் அரசை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குாிய சீமாட்டி அதற்காக ரணில் உத்தமா் அல்ல இப்படியாக இரண்டு கட்சியும் தமிழரை அழித்தது தான் வரலாறு எத்தனை தமிழ் தலைவர்களுக்குத் தெரியும் இன்று செம்மணி படுகொலை நாள் என வாக்கு வியாபாரம் முடிந்து விட்டது.

இனி எதற்கு  யாழ்ப்பாணம்  வருவார்களாம் எப்ப தெரியுமா அடுத்த பிரதேச சபைகளின் தோ்தல்களுக்கு பாவம் மக்கள் இங்கு யாா் முட்டாள்  மக்களே உங்களிடம் முடிவு…..Sammane

SHARE