முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை

261

 

முழு பூசணிக்காயை முழுங்கி விட்டு பசி இருக்கிறோம் என நடிக்கின்ற இலங்கை அரசின் நாடகம் உலகம் அறியாமல் இருக்கலாம். தமிழினம் அறியாமல் இருக்க போவதில்லை.

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என தமிழ் மக்கள் சொல்கின்றோம். இல்லை 40, 000 என ஐ. நா. சொல்கிறது. ஒருவர் கூட இல்லை என்றல்லவா இலங்கை அரசு சொல்கிறது.

பேரினவாத அரச சத்தியவான்கள் நாடகத்தை இனியும் உலகில் எவரும் நம்ப மாட்டார்கள்.

14570434_1284310098275518_4981362757862090388_n

சிங்கள பேரினவாத அரசும் அதன் ஏவல் படைகளும் எப்படி எப்படி எல்லாம் கதைகளை திரிபு படுத்த வல்லன பொய்களை புனைந்து வழக்குகளை சோடிக்க வல்லன என நாம் நன்கே அறிவோம்.

சுட்டவர்களில் 1 தமிழ் காவலர் 4 சிங்கள காவலர்கள் என்பது ஆரம்ப செய்தி. இன்று சுட்டவன் தமிழன் என தமிழின எழுச்சியை மழுங்கடித்து தமிழ் மக்களை ஏமாற்ற பார்க்கிறது அரசு.

அவர்கள் வாதத்தை சரி என்றாலும் யார் தமிழர்கள்? தமிழினத்திற்காக போராடுபவர்கள் தமிழர்கள். அரசின் எலும்பு துண்டுக்கு மாரடித்து கூலிக்கு கொலை செய்பவர்கள் தமிழர்கள் அல்லர். கருங்காலிகள்.

தமிழினத்தை தமக்குள்ள மோத விடும் நாடகத்தை சிங்கள இனவாத அரசு கையில் எடுக்க பார்க்கிறது.

சுட்டவன் அரச இயந்திரத்தின் ஏவல் நாய். அவன் தமிழனா சிங்களவனா என்பது பெரிதல்ல.

சுடப்பட்டவன் தமிழனா சிங்களவனா என்பது கூட பெரிதல்ல. சிங்கள மாணவன் கொலை செய்யப்பட்டாலும் கொலை கொலை தான். இங்கே சுடப்பட்டது அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளால் என்பதே செய்தி..

வடக்கில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட சிங்கள இராணுவம், புலனாய்வு துறை, ஒட்டு குழுவாக இருந்து காட்டி கொடுக்கும் ஏவல் நாய்கள், காவல் துறை, சிறிலங்கா கடற்படை என அரச ஏவல் நாய்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

இத்தனை கொடிய ஆயுத முனையில் எம் மக்களின் உயிருக்கு உத்தரவாகமற்ற வாழ்வு. இதையே கஜன் சுலக்சனின் படுகொலை எடுத்து சொல்கிறது.

அடக்குமுறைகள் புரட்சிக்கு நீர் வார்க்கின்றன. இன்று அஞ்சி ஒடுங்கி வாழ்ந்த எங்கள் இனம் மீண்டும் மக்கள் எழுச்சி போராட்டங்களை கையில் எடுத்திருக்கிறது என்றால் அடக்குமுறைகள் தொடர்கின்றன என்பதே பொருளாகும்.

சர்வதேசத்திற்கு தீர்ப்பு சொல்ல சில கால அவகாசத்தை தமிழினம் கொடுத்திருக்கிறது. ஆனால் சர்வதேசம் இனஅழிப்புக்கு துணை போக்குமாயின் எமக்கான விடுதலையை நாமே வென்றெடுப்போம்!

SHARE