முழு பொய்களை மாணவர்களை கொண்டு சொல்லப்பண்ணி பொய்களை பரப்பிக்கொண்டிருப்பதில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த பொய்களை சில பாராளுமன்ற உறுப்பினர்களும் நம்பும் நிலமை வந்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.