முஸ்லீம்கள் 1990இல் எமதுகிராமத்தினுள் புகுந்து 52பேரை வாளால்வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலைசெய்தனர். பிறந்து ஆறுநாளான பச்சிளம் சிசுவை ஆலமரத்தில் ஓங்கி அடித்து துடிதுடிக்கக்கொன்றார்கள். பெண்களை கண்முன்னே துஸ்பிரயோகம் செய்தனர். அவற்றை மறப்பதற்கில்லை. இன்று அவர்கள் எமது நிலங்களை படிப்படியாக கபளீகரம் செய்துவருகின்றார்கள். மெல்லெனக்கொல்லும் ஊடுருவிக்கூட்டத்திலிருந்து எமது தமிழ்க்கிராமத்தைக்
காப்பாற்றுங்கள்.
இவ்வாறு மானிப்பாய் அருட்தந்தை வண .தயாளனிடம் மன்றாட்டமாக முறையிட்டார் திராய்க்கேணி கிராமத்தலைவர் கார்த்திகேசு.
இந்நிகழ்வு அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப்பிரதேச செலயலாளர் பிரிவிலுள்ள ஒரேயொரு தமிழ்க்கிராமமான திராய்க்கேணி தமிழக்கிராமத்தில்
இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு இன்று நடைபெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியில் இவரது விஜயம் அமைந்திருந்தது.
மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழையமாணவர் அமைப்பின் வேண்டுகோளுக்கமைவாக அருட்தந்தை வண தயாளன் அடிகளார் இன்று அங்கு விஜயம்செய்தார். அவருடன் சமுகசேவையாளர் கி.ஜெயசிறிலும் சென்றிருந்தார்.
கொட்டும்மழைக்கு மத்தியில் அருட்தந்தை குடிசை குடிசையாகச்சென்று மக்களிடம் குறைநிறைகளைக்கேட்டறிந்தார். திராய்க்கேணி மக்களுக்கென ஒரு தகரக்கூடாரத்தை வழங்கிய அருட்தந்தை அதனை பொதுத்தேவைக்கு பயன்படுத்தலாம் எனக்கூறி அதனை முத்துமாரியம்மன் ஆலயபரிபாலன சபையிடம் ஒப்படைத்தார்.
திராய்க்கேணி கிராமத்தலைவர் கார்த்திகேசு மேலும் அங்கு தெரிவிக்கையில்: எமது கிராமம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. எமது வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என்றார். வருங்காலத்தில் எமது உதவி இக்கிராமத்திற்கக்கிடைக்குமென அருட்தந்தை தயாளன் ஆறுதல் வார்த்தை கூறனார்.