“முஸ்லீம் மக்களின் காணிகளை மற்றவர்கள் அபகரிக்க விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை.” வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவிப்பு.

339

 

31.10.2015 அன்று காலை 10.30 மணியளவில் றோயல் மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவிக்கையில்.
unnamed (1) unnamed (2) unnamed
ராணுவம் தமிழ் முஸ்லீம் மக்களின் வடகிழக்கு மாகாண காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்தது போல் விடுதலைப்புலிகள் முஸ்லீம் மக்களின் காணிகளை அபகரிக்க அனுமதிக்கவில்லை. நான் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்தவன். வன்னிநிலப்பரப்பில் நடந்தேறிய அரசியல் போராட்ட சூழல் தெரிந்தவன.  துரதிஸ்டவசமான ஒரு சூழலில் தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட அனுமதிக்கமுடியாத நிலையிலேயே முஸ்லீம் மக்கள் வடபகுதியில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்படவேண்டி இருந்தது. இருப்பினும் முஸ்லீம் மக்களின் காணிகளை தமிழ் மக்கள் அபகரிக்க என்றும் விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. விடுதலைப்புலிகள் தூரநோக்கில் செயல்பட்டதால் தான் இன்று எவ்வித தங்கு தடையும் இன்றி முஸ்லீம் மக்கள் தமது காணிகளில் முல்லைமாவட்டத்தில் குடியேறக்கூடியதாக இருக்கிறது.
 விடுதலைப்புலிகளின் ஆரம்பகால போராட்டத்தில் முஸ்லீம் இளைஞர்களும் முக்கிய பங்கு வகித்தனர். என்றும் முஸ்லீம் மக்களை இனசுத்திகரிப்பு செய்யும் நோக்கில் விடுதலைப்புலிகள் நோக்கவில்லை அதனால்தால் 20 ஆண்டு காலத்தின் பின்னும் முஸ்லீம் மக்கள் தமிழர்களுடன் சேர்ந்து மீழ்குடியேறி வருகிறார்கள். வடகிழக்கு மாகாணம் முஸ்லீம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் மொழி பேசும் மாகாணம். இங்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக எந்த ஒரு தமிழனும் யாதார்த்தத்திற்கு மாறாக செயல்படமாட்டான். ஒரு சில தமிழ் முஸ்லீம் இனவாதிகளால் தமிழ் மொழி பேசும் எமது மக்களின் ஒற்றுமை குலைக்கப்பட இடமழிக்கமுடியாது.
அதேசமயம் எமது வடகிழக்கு பிரதேச மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தபின் சிங்கள ராணுவம் எமது காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கியது பாரிய தவறு. மேற்படி தமிழ்மொழி பேசும் தமிழ் முஸ்லீம் மக்கள் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சிங்கள அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் துணைபோயினர் என்பது பட்டவர்த்தனம்
SHARE