மூடநம்பிக்கையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11, பேர் தற்கொலை. மோட்சம் கிடைக்கும் என்றே நம்பிக்கையில்

146

 

மூடநம்பிக்கையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11, பேர் தற்கொலை.
மோட்சம் கிடைக்கும் என்றே நம்பிக்கையில்
எத்தனை பெரியார் வந்தாலும் எவ்வளவு படித்தாலும் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது.

டெல்லியில் 11 பேர் ஒரே வீட்டில் உயிரிழந்ததற்கு மூட நம்பிக்கையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டெல்லி புராரி ((Burari)) பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பத்தினரின் வீட்டில் புலனாய்வு மேற்கொண்டபோது அங்கு பூஜைகள் நடைபெற்றது தொடர்பான அடையாளங்கள் தெரிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மனித உடல் தற்காலிகமானது என்றும், முக்தி அடைவது குறித்த வழிமுறைகள் என்பது போன்ற கருத்துக்கள் அடங்கிய காகிதக் குறிப்புகளும் கிடைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் அந்தக் குறிப்புகளில் இருந்தது போன்றே அவர்களில் 10 பேர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்தக் குடும்பத்தினர் நன்கு கற்றறிந்தவர்கள் என்றும் அவர்களில் ஒரு பெண் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றியவர் என்று கூறப்படும் நிலையில் அவர்களது மர்ம மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கக் கூடுமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

https://www.facebook.com/100014757279612/videos/449303675571538/

SHARE