மூத்த பிரஜைகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை

102

 

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வங்கி வைப்புத்தொகையை வைத்துள்ள மூத்த பிரஜைகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை நேற்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் அத்தகைய கணக்குகளை ஒரு வருடம் ஆகவில்லை என்றாலும் வட்டியுடன் பெற்றுக்கொள்ள உரிமையுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1944 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் இந்தக் கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

SHARE