மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, வல்கம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு இளைஞன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை, எலவில்ல பகுதியில் கடந்த 24 ஆம் திகதி மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் மாலைநேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான்.
இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே சரணடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை நீதிமன்றில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மற்றுமொருவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே மாத்தறை பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளினால் இன்று காலை 6.20 மணியளவில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.