இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கிடையிலான 3 வது ரெஸ்ட் போட்டி மேற்கிந்தியத்தீவில் நடைபெற்று வருகிறது
ஆட்டத்தின் இரண்டாம் நாளாகிய நேற்று இந்திய அணி சகல இலக்குகளையும் இழந்து 353 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத்தீவுகள் 107 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கை இழந்திருந்தது.
மேற்கிந்தியத்தீவு அணி சார்பாக டரன் பிராவோ 18 ஓட்டங்களையும் பிரத் வெயிட் 53 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்
முன்னதாக இந்திய அணி சார்பாக அஷ்வின் , சகா சதம் கடந்தமை குறிப்பிடத்தக்கது