மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்களை தடை செய்யுமாறு கோரிக்கை

597
கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு மற்றும் மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்வண்டியை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் வண்டிகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத்துடன், இந்த பஸ் வண்டிகளானது தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பஸ் வண்டிகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும் பேருந்துகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர்  ரஞ்சித் வித்தானகே தெரிவித்துள்ளார்.

இந்த பஸ் வண்டிகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே நேற்று மேற்படி விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், இந்த பஸ் வண்டிகளானது தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பஸ் வண்டிகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும் பேருந்துகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர்  ரஞ்சித் வித்தானகே மேலும் குறிப்பிட்டார்.

SHARE