பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள மூன்று கடைகள் நேற்று திடீர் தீ காரணமாக முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீயினால் இரும்புக்கடை (ஹார்ட்வெயார்) ஒன்றும் இரு துணிக்கடைகளும் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.
குறித்த தீ பரவல் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக களுத்துறை, ஹொரணை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டதாகவும், அவர்களின் உதவியுடன் தீயை பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் பொலிஸார் கூறினர்.
குறித்த விபத்து காரணமாக எந்த உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், தீ பரவலுக்கான காரணம், சேத விபரங்கள் குறித்த விபரங்கள் என்பன தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.