மூன்று குடும்பங்களுக்கான வாழ்வாதார வலுவூட்டுகை. கணவரின் நினைவாக புலம்பெயர் பெண்மணி உதவி

291

 

தனது கணவரின் நினைவாக மூன்று குடும்பங்களுக்கான வாழ்வாதார வலுவூட்டலை புலம்பெயர்ந்துவாழும் பெண்ணொருவர் மேற்கொண்டுள்ளார். குறித்த உதவியானது வடமாகாணசபை உறுப்பினர் மிதிப்புறு துரைராசா ரவிகரன் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
0c5c9692-ee0d-428b-81ac-78944163086c e62b8c20-0096-4722-984f-f4d0d9843138
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புலம்பெயர்ந்து வாழும் பெண் தலைமைத்துவ பெண்மணி, தனது கணவனின் இறந்ததின நினைவாக ஒவ்வோர் ஆண்டும் தெரிவு செய்யப்பட்ட இரண்டு அல்லது மூன்று பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றார்.
இந்த வகையில் கடந்த 2016.05.10ம் திகதி தனது கணவனான இராசரத்தினம் இரட்ணசிங்கம் (இரட்ணா)  அவர்களின் நினைவு தினத்தன்று முள்ளியவளை பொன்னகர் கிராமத்திலுள்ள இரண்டு பெண் தலைமைத்துவ இணைந்த குடும்பங்களின் (தாயின் குடும்பமும் மகளின் குடும்பமும்) வாழ்வாதாரத்துக்கு தோட்ட செய்கைக்காக 2இஞ்சி-2பரிவலு கொண்ட நீர் அழுத்தவிசைப்பொறியும், முல்லைத்தீவு செல்வபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு கிணற்றுத்தேவைக்காக ஐந்து பைஞ்சுதைப்பொதிகளும் (சீமெந்து பக்கற்றுகள்) வழங்கப்பட்டன.
மேற்படி உதவிகள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் ஊடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE