மூன்று மாதங்களுக்கு ஒருதடவை எரிபொருள் விலையில் மாற்றம்

129

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலையில் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி மற்றும் தகவல், ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இதன் பிரகாரம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை எரிபொருள் விலை சர்வதேச சந்தைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்.

முதல் இரண்டு மாதங்களின் சந்தை நிலவரத்தைப் பொறுத்து மூன்றாவது மாதத்தின் ஐந்தாம் திகதி தொடக்கம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படும். இதற்காக திறைசேரி மற்றும் எரிபொருள், கனிய வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. சர்வதேச சந்தையின் நிலவரத்துக்கேற்ப எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான சூத்திரம் கடந்த மே மாதம் 11ம் திகதி தொடக்கம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE