மூன்று யுவ­திகளை நிர்­வா­ண­மாக நட­ன­மாட வைக்க முயன்ற கணவனும் மனைவியும் சிக்கினர்…..

306

திரைப்­படம் ஒன்றின் நடனக் காட்சிக்காக பயன்­ப­டுத்­தப்­பட்ட மூன்று யுவ­தி­களை ஒத்­திகை நிகழ்வின் போது நிர்­வா­ண­மாக நட­ன­மாட வைக்க முயன்ற திரைப்­பட இயக்­குனர் என கூறிக்­கொள்ளும் நபர் ஒரு­வ­ரையும் அவ­ரது மனை­வி­யையும் பண்­டா­ர­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

நடன ஆசி­ரியர் என குறித்த நபர் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ள போதும் அவர் ஒரு மேல­திக நேர வகுப்பு ஆசி­ரியர் எனக் கூறப்­ப­டு­கின்­றது.

இந் நிலையில் குறித்த நபர் விளம்­பரம் செய்து நாட்­டிய காட்­சி­யொன்றில் நடிக்க மூன்று யுவ­தி­க­ளையும் இளைஞர் ஒரு­வ­ரையும் தெரிவு செய்­துள்ளார்.

பின்னர் அவர்­க­ளுக்கு நடனப் பயிற்­சியும் வழங்­கப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் உடல் கட்­ட­மைப்­பையும் அங்க அசை­வு­க­ளையும் துல்­லி­ய­மாக அவ­தா­னிக்க வேண்டும் என தெரி­வித்து குறித்த நபர் இவர்­களை நிர்­வா­ண­மாக நட­ன­மாட வைக்க முயன்­றுள்ளார்.

இதனை நிரா­க­ரித்­துள்ள குறித்த யுவ­தி­களும் இளை­ஞரும் அங்­கி­ருந்து தப்பிச் சென்று பண்­டா­ர­கம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே சந்தேக நபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

girl_dans

 

SHARE