மூன்று வருடங்களில் 5000 கோடி ரூபாவை செலவு செய்த நல்லாட்சி

146

கடந்த மூன்று வருடங்களில் தற்காலிக குடிநீர் வசதி வழங்குவதற்காக மட்டும் நல்லாட்சி அரசாங்கம் 5000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது என அனர்த்த நிவாரண அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வறட்சி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக குடிநீர் வசதிகளை வழங்குவது அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயற்பாடுகளில் ஒன்று.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான மூன்று வருட காலப்பகுதியில் மட்டும் இவ்வாறான சேவைகளை வழங்க நல்லாட்சி அரசாங்கம் 5000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக அனர்த்த நிவாரண அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

SHARE