இதுவரை கண்டறியப்படாதிருந்த மூளையிலுள்ள மறைவிடம் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை நரம்பியல் நிபுணரான George Paxinos மற்றும் அவரது குழுவினர் Neuroscience Research Australia (NeuRA) இல் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது கண்டுபிடித்துள்ளனர்.
இப் பகுதியானது உணர்வு மற்றும் இயக்கங்கள் தொடர்பான தகவல்களை வாங்கிக்கொள்ளும் பகுதியாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது உடலின் அமைப்பு (நிலை), சமநிலை மற்றும் அசைவு என்பவற்றினால் உண்டாக்கப்படும் தகவல்களை இப் பகுதி வாங்கிக்கொள்கின்றது.
வெறும் 2 மில்லி மீற்றர் அளவே உடைய இப் பகுதி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக George Paxinos தெரிவித்துள்ளார்.