மூளை அறுவை சிகிச்சையின் போது உறங்காமல் இருக்க பாடல் பாடும் பெண்

139

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூளை அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

19 வயதான கிரா ஐகானெட்டியின் இசைப்பயணமானது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாகா ஏற்பட்ட கை-கால் வலிப்பு காரணமாக தடைபட்டது.

இதனால் பெரிதும் கவலையில் இருந்த கிராவிற்கு சமீபத்தில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூளை அறுவை சிகிச்சையின் போது உறங்கக்கூடாது என்பதால், கிரா தனக்கு பிடித்தமான ‘Island in the Sun’ பாடலை பாடிக்கொண்டிருந்தார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

SHARE