மெக்கா மசூதியில் கிரேன் சரிந்து விழுந்த விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம்: சவுதி அரசு

316
இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியினுள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த 107 பேர் பலியான விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம் என சவுதி அரசு  தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று வெள்ளி இரவு சரிந்து விழுந்ததில் இரு இந்தியர்கள் உள்பட 107 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து பற்றி கருத்து தெரிவித்துள்ள சவுதியின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குனர் ஜெனரல், சுலைமான் பின் அப்துல்லா அல்-ஆம்ரோ “ கிரேன் கவிழ்ந்து விழுந்ததிற்கு, அப்பகுதியில் வழக்கத்திற்கு மாறான சக்தி வாய்ந்த காற்று வீசியது தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்,

SHARE