கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி எல்லை மாநிலமான தம்மோவ்லீபஸில் அமைந்திருக்கும் மூன்று நகரங்களில் அவசர நிலையை மெக்சிகோ அரசு அறிவித்திருக்கிறது.

அல்டமீரா, சியுடாட் மடேரோ மற்றும் தம்பிகோ ஆகிய மூன்று நகரங்களுக்கு நிவாரண நிதி உதவி கிடைப்பதற்கு இந்த அறிவிப்பு வழிசெய்யும்.
ஆண்டுதோறும் கிடைக்கின்ற சராசரி பருவமழை அளவில், ஐந்தில் ஒரு பகுதி மழை வியாழக்கிழமை நான்கு மணிநேரத்தில் அங்கு பெய்திருக்கிறது.

வெள்ளப்பெருக்கால் தங்களுடைய உறைவிடங்களை விட்டு வெளியேறியோருக்காக ஆறு அவசரகால உறைவிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.