மெக்ஸிகோவில் நிலச்சரிவு – மக்களின் வாழ்க்கை பாதிப்பு

278

பியூப்லா: மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

கிழக்கு மெக்ஸிகோவில் கனமழை காரணமாக பியூப்லா மற்றும் வெராகுரூஸ் பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பியூப்லா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இதேபோல், வெராகுரூஸ் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளையும் தங்கள் உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பட்டு உள்ளது.

 

SHARE