மெதுவாக வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

332
தோட்ட தொழிலாளர்களின் ஆறாவது சம்பள பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கடையிலும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முழுமையடையாத காரணத்தினாலும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படாததன் காரணமாகவும் இன்று அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மெதுவான பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்ததோடு அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொழிற்சங்கங்கள் முறையான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்காததை கண்டித்தும் ஆயிரம் ரூபா சம்பளத்தை உடனடியாக கம்பனி வழங்க வேண்டும் என்பதனையும் மெதுவாக வேலை செய்ததற்கான சம்பளத்தையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அக்கரப்பத்தனை பிரதான வீதியில் ஆகுரோவா தோட்ட சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொழிற்சங்கங்களும், கம்பனி அதிகாரிகளும் தொழிலாளர்களை ஏமாற்றியதாக கூறியும், பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஈடுப்பட்டனர்.

– See more at: http://www.tamilwin.com/show-RUmtyHSaSVnq3E.html#sthash.BIajkiy8.dpuf

SHARE