மெய்ப்பாதுகாவலரின் கல்லறையில் நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி

142

நீதிபதி இளஞ்செழியன் தனது மெய்ப்பதுகாவலரான மறைந்த பொலிஸ் உப பரிசோதகர் ஹேமச்சந்திரவின் வீட்டிற்கும் அவரது கல்லறை அமைந்துள்ள இடத்திற்கும் சென்று ஓராண்டு நினைவஞ்சலி செலுத்தினார்.

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்து நேற்று ஒருவருடம் நிறைவடைந்துள்ளது.

குறித்த நினைவுதின நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் அவர குடும்பதித்தினர், பிள்ளைகளுக்கும் அருதல் கூறினார்.

யாழ். மாவட்ட நீதிபதியாக இளஞ்செழியன் கடமையாற்றும் போது அவரது மெய்ப்பதுகாவலராக ஹேமச்சந்திர கடமைபுரிந்த தருணத்தில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE