மெர்சல் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி- கூடிய விரைவில் அது நடக்குமாம்

215

விஜய்யின் மெர்சல் தான் இப்போது தமிழ் சினிமாவில் வெளியான பெரிய படம். 14 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் சாதனை செய்து வருகிறது.

இப்படம் ரிலீசுக்கு முந்தைய நாள் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது தெலுங்கிலும் இப்படம் அதிரிந்தி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. சில தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் தெலுங்கில் இன்னும் படம் வெளியாகாமல் இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக செய்திகள் வந்தது.

ஆனால் இந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது, அதோடு படம் கூடிய விரைவில் தெலுங்கில் வெளியாகும் என்று கூறியுள்ளனர்.

SHARE