மெஸ்சிக்கு இரண்டாவது மகன்

395
அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு இரண்டாவதாக மீண்டும் மகன் பிறக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி, 27. இவரது மனைவி அன்டோனெல்லா ராகுஜோ, 27. இவர்களுக்கு கடந்த 2012 நவம்பரில் தியாகோ என்ற மகன் பிறந்தான்.

தற்போது இந்த ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது. இது ஆண் குழந்தை என்றும், ‘பெஞ்சமின்’ என, பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அர்ஜென்டினாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது மெஸ்சியின் நெருங்கிய நண்பர் அகுயரோவின் மகன் பெயராகும்.

SHARE