இன்டர் மியாமி அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Club Friendlies போட்டி
கிங்டம் அரேனா மைதானத்தில் நடந்த Club Friendlies போட்டியில் இன்டர் மியாமி மற்றும் அல் நஸர் அணிகள் மோதின.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் 3வது நிமிடத்திலேயே அல் நஸரின் Otavio கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அல் நஸரின் தலிஸ்கா 10வது நிமிடத்திலும், ஐமெரிக் லபோர்டே 12வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
திணறிய இன்டர் மியாமி
அல் நஸரின் தாக்குதல் ஆட்டத்தினை சமாளிக்க முடியாமல் இன்டர் மியாமி திணறியது. முதல் பாதியில் 3-0 என அல் நஸர் முன்னிலை வகித்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியிலும் அல் நஸர் வீரர்கள் இன்டர் மியாமிக்கு பயத்தை காட்டினர்.
51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் தலிஸ்கா கோல் அடித்தார். அதன் பின் 68வது நிமிடத்தில் முகமது மரன் கோல் அடித்தார்.
இமாலய வெற்றி
அடுத்தடுத்த கோல்களால் கதிகலங்கிய இன்டர் மியாமி அணி, அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 73வது நிமிடத்தில் தலிஸ்கா மீண்டும் ஒரு கோல் அடித்து அலறவிட்டார்.
இறுதியில் அல் நஸர் அணி 6-0 என இமாலய வெற்றி பெற்றது. இன்டர் மியாமி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாதது அந்த அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
காயம் காரணமாக விளையாடாத ரொனால்டோ, போட்டியை மைதானத்தில் ரசித்து பார்த்தார். அணியின் வெற்றியை அவர் ஆர்ப்பரித்து கொண்டாடினார்.