மொனராகலையில் யுவதி ஒருவரை கடத்திய நபர்கள்!! பின்னர் நடந்த விடயம்…

267

 

மொனராகலையில் யுவதி ஒருவரை கடத்திய நபர்கள்!! பின்னர் நடந்த விடயம்…

மொனராகலை – படல்கும்புர பிரதேசத்தில் சில நபர்கள் யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட போது காவற்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியினை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் ஆதரவாளர்களே, யுவதியை கடத்த முயன்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து வர்த்தகரையும், அவரது மூன்று ஆதரவாளர்களையும் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த யுதவதியை கடத்தி, 5 மசாஜ் நிலையங்களை நடாத்திச் செல்வதற்கு முயற்சித்துள்ளதாக விசாரணையில் அறியவந்துள்ளது.

கடத்திச் செல்ல முற்பட்ட யுவதி இதற்கு முன்னர் குறித்த வர்த்தகரின் மசாஜ் நிலையம் ஒன்றில் சேவை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் யுவதி அங்கிருந்த விலகி சென்றுள்ளதுடன், தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே கடத்த முற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் மொனராகலை நீதாவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

SHARE