“மேக்கப் இல்லாத அமலாபாலை மிகவும் பிடிக்கும்” என்று முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழும் சுகுமார் கூறியிருக்கிறார். ‘லாடம் படத்தில் தொடங்கி ‘மைனா’ ,’கும்கி,’மான் கராத்தே மற்றும் சமீபத்தில் வெளியான காக்கிசட்டை’ படம் வரையில் அழகான ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்து வருபவர் ஒளிப்பதிவாளர் சுகுமார். தற்போது கெத்து மற்றும் விக்ரம் பிரபுவின் அடுத்த படம் என்று தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார். போட்டோகிராஃபராக தனது பயணத்தை தொடங்கியவர் தனது கடின உழைப்பின் மூலம் இன்று முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரிடம் ஒளிப்பதிவு மற்றும் படங்களில் பணிபுரியும் அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, மனந்திறந்து பேசினார். ஒளிப்பதிவைப் போலவே அவரது பேச்சும் கொள்ளை அழகாகவே இருந்தது, ஒளிப்பதிவு குறித்த அவரின் அனுபவத்தை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.