மேக்கப் மேன்களுக்கு ஒருநாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

193

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.

இவர் நடிக்கிறார் என்றாலே அப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு எகிறிவிடுகிறது. அவர் அண்மையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்,

சென்னையில் சமீபத்தில் வெட்டி பசங்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

இதில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், நயன்தாரா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் பாம்பேவில் இருந்து மேக்கப், சிகை அலங்காரம் என 5,6 உதவியாளர்களை விமானத்தில் வரவைத்துக்கொள்கிறார்கள்.

ஏன் இங்கு கலைஞர்கள் இல்லையா, அவர்கள் தலைமுடி தங்கத்திலா உள்ளது. தயாரிப்பாளர் தான் அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும்.

அவங்களுக்கு ஒரு நாள் செலவு ஒரு லட்சம் என்கிறார்கள். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 50 லட்சம் ரூபாய் அதுக்கே போய்விடும்.

யாரையும் குறை கூறவில்லை, இதுபோன்ற செலவை மிச்சப்படுத்தினார் தயாரிப்பாளர் நஷ்டத்தில் இருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம் என பேசியுள்ளார்.

SHARE