
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு இன்றைய தினம் வைத்தியசாலையில் காலமானார்.
வீட்டு நிர்மானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மேஜர் ஜெனரல் மானவடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தெல்கந்த பிரதேசத்தில் அவரது வீடு ஒன்று நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும் நிர்மானப் பணிகளை பார்வையிடச் சென்ற போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேஜர் ஜெனரல் மானவடு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை கடந்த 2010ம் ஆண்டு கைது செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மானவடு மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை மேஜர் ஜெனரல் மானவடு வழிநடத்தியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.