இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார்.
அவருக்கு நாளை கவசப்படைப்பிரிவினால், பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
கடந்த பெப்ரவரி 12ஆம் நாள் தொடக்கம், இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பணியாற்றி வந்தார்.
அதேவேளை, மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், ஓய்வு பெற்ற பின்னர், தற்போது பிரதித் தலைமை அதிகாரியாக இருக்கும், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம் வரும் 22ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது.
எனினும், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசசேன சேவை நீடிப்பு வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.