நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியும், விஜய்யும் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டனர். பிரபல பத்திரிக்கை நடத்திய விழாவில் இவர்கள் பங்கேற்றனர்.
இதில் ரஜினி வரும் போது அரங்கமே எழுந்து நின்றது, விஜய்யும் ரஜினி அமரும் வரை எழுந்தே நின்றார், பிறகு கடந்த வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதை அறிவிக்க விஜய்யை அழைத்தனர்.
கபாலி படத்திற்காக ரஜினி தான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது ரஜினி காலில் விழுந்து விஜய் ஆசிபெற்றார்.
அதை தொடர்ந்து பேசிய விஜய் ‘டானுக்கு பில்லா, மாஸுக்கு பாட்ஷா, கிளாஸுக்கு ஒரு கபாலி’ என கூற அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.