மேதினத்தில் சந்தோஷ களிப்பில் சென்ற முத்து சிவலிங்கம் எம்.பி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

283

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான திரு.முத்து சிவலிங்கம் சுகவீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் 01.05.2016 அன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இவர் நுவரெலியாவில் 01.05.2016 அன்று நடந்த மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு பிரிதொரு கூட்டம் ஒன்றுக்கு அவசரமாக செல்ல வேண்டம் என கோரி மகிழ்ச்சியுடன் சென்றார்.

இருந்தும் 01.05.2016 அன்று மாலை அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் மாரடைப்பு நோய் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

38f4ced3-37f1-4a08-a4d3-57765959d7ab

(க.கிஷாந்தன்)

SHARE