மேத்யூஸூக்கு ஐசிசி அனுமதி

149

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் இணைவதற்கு ஏஞ்சலோ மேத்யூஸூக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரைத்த குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்கமைய வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரனவுக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் இணைகிறார்.

(செய்திப் பின்னணி – October 24, 2023 02:48 pm)

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரன காயம் காரணமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

அவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE