மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி இலங்கை அணி

157

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்டில், வெற்றிக்கு 63 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் இலங்கை அணி விளையாடி வருகிறது.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பார்படாஸில் நடைபெற்று வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களும், இலங்கை தனது முதல் இன்னிங்சில் 154 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் தனது 2வது இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை தரப்பில் லக்மல், ரஜிதா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 144 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், மஹேல உடவத்த ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து வந்த டி சில்வா 17 ஓட்டங்களிலும், தொடக்க வீரர் குணத்திலக்க 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்ஸிலும் ஹோல்டரின் அபார பந்துவீச்சில் ரோஷன் சில்வா 1 ஓட்டத்திலும், திக்வெல்ல 6 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இந்நிலையில், 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடனும், தில்ரூவன் பெரேரா ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், கேமர் ரோச் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 63 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

SHARE