மேல் மாகாணத்தில் 279 பேருக்கு சிவப்பு எச்சரிக்கைகள்

207

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இருநாள் டெங்கு பரிசோதனையின் போது டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த 738 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது 459 பேருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருப்பதுடன், எஞ்சியவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் கடந்த மாதம் 27,28ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 1,200 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

மொத்தமாக 35,720 இடங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றுள் 738 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஏற்கனவே தரப்பட்டிருந்த சிவப்பு

அறிவித்தலை உதாசீனம் செய்திருந்த 459 பேருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டதுடன் எஞ்சிய 279 பேருக்கு புதிதாக சிவப்பு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இருநாள் பரிசோதனையின்போது 58 அரச நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

SHARE