மே தினக் கூட்டங்களின் போது பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் பல பகுதிகளிலும் மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
இந்த கூட்டங்கள் பேரணிகளின் போது பாரியளவிலான அசம்பாவிதங்களோ சம்பவங்களோ பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மே தினக் கூட்டங்கள் பேரணிகளை கண்காணிக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர காலியிலிருந்து கொழும்பிற்கும், கொழும்பிலிருந்து காலிக்கும் விஜயங்களை மேற்கொண்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.