மே 11இல் லண்டன் செல்லும் ஜனாதிபதி, மே 13இல் இந்தியா செல்கிறார்.

236

எதிர்வரும் 11ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் மாநாடு ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.

லண்டனில் நடைபெறவுள்ள ஊழல்களுக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என்ற பெரும்பலானோர் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை பௌத்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மைத்திரிபால மே 13ஆம் திகதியன்று இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21114f7d-db2c-407c-a6d1-18a428ad3e4d1

SHARE