குழந்தை நட்சத்திரனமாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை ஷாலினி. கிட்டதட்ட 8 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
50 படங்களுக்கும் மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஷாலினி கதாநாயகியாக நடித்த படங்கள் மிகவும் குறைவு தான்.
மலையாளத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க துவங்கிய இவர், விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் என சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் கூட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஷாலினி நடிகர் அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இதுவரை எந்த ஒரு படத்திலும் ஷாலினி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் ஜாக்சனுடன் ஷாலினி
இந்நிலையில், நடிகை ஷாலினி, உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சனுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் அது மைக்கேல் ஜாக்சன் என கூறப்பட்டது.
ஆனால், அது உண்மையான மைக்கேல் ஜாக்சன் கிடையாது. அவரை போலவே இருக்கும் போலியுடன் தான் ஷாலினி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..