80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் மைக் மோகன். 1990-களுக்கு பின் பெரிதாக படங்களில் இவர் நடிக்கவே இல்லை.
சில படங்கள் வெளிவந்தாலும் கூட அப்படங்கள் பேர்சொல்லும் அளவிற்குவெற்றிபெறவில்லை. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
ஹரா என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தளபதி விஜய்யின் 68வது படத்தில் அவருக்கு வில்லனாக மைக் மோகன் தான் நடித்து வருகிறார்.
ஜோடியாக இவரா
இந்நிலையில் மோகன் ஹீரோவாக நடித்து வரும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அனுமோல் என்பவர் நடிக்கிறார்.
நடிகை அனுமோல் கடந்த ஆண்டு வெளிவந்த அயலி வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரா படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட மோகன் மற்றும் அனுமோலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..