மைதானத்தின் நடுவே இரவோடிரவாக முளைத்த குப்பை மேடுகள்!

182

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளைக் குவித்தமை தொடர்பில் உணவக விடுதி உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரான எஸ். ரவிதர்மா, பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று காலை மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தைச் சென்று பார்வையிட்டபோது அங்கு இரவோடிரவாக பாரிய சாக்கடைக் கழிவுப் பொதிகள் கொட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

இது குறித்து பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடியிலுள்ள இரண்டு உணவக விடுதி உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மட்டக்களப்பு மாநகர சபையின் உதவியுடன் அங்கிருந்து திண்மக் கழிவகற்றி தரப்படுத்தும் திருப்பெருந்துறை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)

அத்துடன் மாநகரசபையினால் சம்பந்தப்பட்ட உணவக விடுதி உரிமையாளர்களுக்கெதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. இதுவிடயமாக சுற்றுச் சூழல் மாசுபடுத்தல் பிரிவின் கீழ் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE