மைதானம் வேண்டும்: அபயபுர மக்கள் ஆர்ப்பாட்டம்

293
திருகோணமலை அபயபுர பகுதி மக்கள் நேற்று காலை 10.00 மணி அளவில் திருகோணமலை – கண்டி வீதியின் அருகாமையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் தாம் அப்பகுதியில் 1950களில் S.W.R.D. பண்டாரநாயக்க அவர்களால் குடியேற்றப்பட்டதாகவும்  அன்றிலிருந்து அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்தி வருவதாகவும்  குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் இவ்வருடம் 8ஆம் திகதி குறித்த மைதானம் அமைந்துள்ள காணிப்பகுதி தன்னுடையது என தெரிவித்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸாருடன் அப்பகுதியை அளவிட வந்ததாக தெரிவித்தனர்.

இதன் போது குறித்த நபரிடம் இருந்து தமது மைதானத்தினை பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை பிரதேச செயலாளர் அருள்ராசா குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

SHARE