மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி மஹிந்தவுக்கு முடியாது

165

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் இந்த வருட ஆரம்பத்தில் அளித்த தீர்ப்பின் படி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமது பதவிக்காலம் ஐந்து வருடங்களாக இருக்குமா? அல்லது 6 வருடங்களாக இருக்குமா? என்ற கேள்வியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.

எனினும் ஜனாதிபதி, 19ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் பதவியை ஏற்றிருந்தாலும் அவரின் பதவிக்காலத்தை முன்னர் இருந்த நடைமுறையின்படி 6 வருடங்களுக்கு நீடிக்க முடியாது என்று தீர்ப்பளித்திருந்ததாக இந்துனில் இதன்போது குறிப்பிட்டார்.

எனவே 19 வது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் போட்டியிடமுடியாது என்பது தெளிவாவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE