மைத்திரிபாலவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

337

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காவல்துறையின் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியுடன், ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் சிவில் உடையில் சஞ்சரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை அங்குனுகொல பெலஸ்ஸ பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டம் ஜனாதிபதி தலைமையிலேயே நடைபெற்றது. 
ஜனாதிபதிக்கு அருகாமையில் செல்வதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மெய்ப்பாதுகாவலரையும், நாமல் ராஜபக்ஸவையும் சோதனையிடாது உயர் காவல்தறை அதிகாரி ஒருவர் அனுமதித்துள்ளார்.

my
இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சோதனையிடாது நாமலின் மெய்ப்பாதுகாவலரை உள்ளே அழைத்தவர், நாமலின் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE