மைத்திரியின் அதிரடி நடவடிக்கை

244

60e7665555aed397f245d17f269425d3_L

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காமினி லொக்குகே, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்த யாப்பா அபேவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, சீ.பீ. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, உதித் லொக்குபண்டார உட்பட பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, 40 புதிய அமைப்பாளர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிய தொகுதி அமைப்பாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

16 தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் 24 மாவட்ட அமைப்பாளர்கள் ஜனாதிபதியிடம் இருந்து நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

தொகுதி அமைப்பாளர்களாக பதவி வகித்த 13 பேர் தமது பதவிகளை இழந்துள்ளனர்.

கெஸ்பேவ தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து காமினி லொக்குகே நீக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக சந்தன கத்திரியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

மீரிகம தொகுதியின் இணைப்பாளராக பதவி வகித்த கோகிலா குணவர்தன பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு சஞ்சய சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து சரத் குமார குணரத்ன நீக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக டப்ளியூ.டி. லலித் டென்சில் நியமிக்கப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டிய தொகுதியின் இணை அமைப்பாளராக பதவி வகித்த உபேக்ஷ சுவர்ணமாலி, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தன ஜயகொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் களுத்துறை தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து ரோஹித்த அபேகுணவர்தன நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹேமால் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

குண்டாசாலை தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து கெஹெலிய ரம்புக்வெல்ல நீக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக சுனில் சித்சிறி அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

வலப்பனை தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து சீ.பீ. ரத்நாயக்க நீக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு பதிலாக ஜகத் குமார சமரஹேவா நியமிக்கப்பட்டுள்ளார்.

எகலியகொட தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து பவித்ரா வன்னியாராச்சி நீக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக சரத் சந்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கோகாலை மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்த ஜகத் பாலசூரிய நீக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக ஆனந்த மில்லேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊவா பரணகம தொகுதி அமைப்பாளராக பதவி வகித்த ஏ.எம். புத்தாச நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.எம்.பி.ஏ. தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை இணை அமைப்பாளராக பதவி வகித்த உதித் லொக்குபண்டார அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் அந்த தொகுதியின் இணைப்பாளராக பதவி வகித்த சுமித் சமயதாச பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE