மைத்திரியின் பாடலை எழுதியவர் மகிந்தவின் சகாவா?

277
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டதாக கூறப்படும் பாடலுடன் ஜனாதிபதிக்கோ ஜனாதிபதியின் செயலகத்திற்கோ தொடர்பில்லை என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நீ எங்களின் மனிதன் என்ற இந்த பாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெய்வமாகவும் மன்னராகவும் சித்தரித்து இந்த பாடல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

கலாநிதி அரோஷ பெர்னாண்டோ என்பவர் இந்த பாடலையும் அதற்கான காணொளியையும் தயாரித்துள்ளார்.

இந்த நபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது அரசாங்கத்திற்கு சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிப்பாளராக பணியாற்றியதுடன் தற்போது தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

SHARE