மைத்திரியின் முடிவிற்காக காத்திருக்கும் பரணகம…?

263

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தமது பணிகளை நிறைவுபடுத்துவதற்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்று வெள்ளிக் கிழமையுடன் முடிவடையும் நிலையில், தமது பணிகளை நிறைவுபடுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் புலனாய்வுதுறை அதிகாரி எம்.ஆர். ஆத்திரிஸ் ஐ.பி.சி தமிழ் செய்திக்கு தெரிவித்தார்.

எனினும் கால அவகாசம் வழங்குமாறு கோரி கடந்த மாதம் பரணகம ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும், இந்த கடித்திற்கு இன்று பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஆத்திரிஸ் கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் நீதியரசர் பரணகம தலைமையில் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பரணகம ஆணைக்குழு பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மைத்திரியின் முடிவிற்காக காத்திருக்கும் பரணகம…?

paranagama-1

SHARE