ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, இந்துமத விவகாரம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓர் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த பூஜை வழிபாடுகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது. பூஜை வழிபாடுகளை அடுத்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.